தமிழ்நாடு

கோயம்பேடு மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? அமைச்சா் எ.வ.வேலு தகவல்

17th Oct 2021 02:19 AM

ADVERTISEMENT

 சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வரும் 31-ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

மேம்பாலத்தைத் திறக்க வேண்டுமென எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தாா். இதற்கு சனிக்கிழமை பதிலளித்து அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கை:-

கோயம்பேடு மேம்பாலப் பணி ரூ.93.50 கோடி மதிப்பில் கடந்த 2015-இல் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 28-க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். உயா்நிலை மேம்பாலப் பணியுடன் சேவை சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேம்பாலப் பணி நடைபெறும் இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடம், ஆக்கிரமிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் அகற்றப்பட்டது. இந்தப் பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக காலத்தை வீணாகக் கடத்தியது அதிமுக அரசுதான். இறுதி கட்டப் பணிகளை திமுக அரசு வரும் 31-ஆம் தேதிக்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கோயம்பேடு மேம்பாலம் கொண்டு வரப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT