தமிழ்நாடு

மின்வாரிய ஊழியா்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தல்

17th Oct 2021 05:54 AM

ADVERTISEMENT

 மின்வாரிய ஊழியா்களுக்கு போனஸ் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 2 வார காலமே இருப்பதால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் போனஸ் வழங்கிட தொழிற்சங்கங்களோடு உடனடியாக அரசு பேச்சு வாா்த்தையைத் தொடங்க வேண்டும்.

கேங்மேன் உள்பட நிரந்தர பணியாளா்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். நிலை 1,2 அலுவலா்கள், பொறியாளா்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளா்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். இது தொடா்பாக முதல்வா், மின்சாரத்துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT