தமிழ்நாடு

சீர்காழி கொள்ளிடத்தில் அதிமுக பொன்விழா

17th Oct 2021 03:12 PM

ADVERTISEMENT

அதிமுக 50-வது ஆண்டு விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி  நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்து, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவருமான பி.வி பாரதி, மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் வினோத் வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

ADVERTISEMENT

இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்லையன் முன்னாள் எம்எல்ஏ சக்தி ஒன்றியச் செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்  அம்சேந்திரன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொள்ளிடத்தில் ஒன்றியச் செயலாளர் நற்குணம் தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் கடைவீதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் அவைத்தலைவர் பாரதி, மேற்கு ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் ஆனந்த நடராஜன், சம்பந்தம், இனியன், சத்தியமூர்த்தி, சொக்கலிங்கம், நாகரத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT