தமிழ்நாடு

அதிமுக பொன்விழா: ஈரோட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை

17th Oct 2021 01:02 PM

ADVERTISEMENT

ஈரோடு: அதிமுக பொன் விழா ஆண்டையொட்டி ஈரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50வது ஆண்டு(பொன் விழா) துவக்க விழாவை அக்கட்சியினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதில், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக, சார்பில் பொன்விழாவை கொண்டாடும் விதமாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு அதிமுக, ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பிசி ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், தென்னரசு, முன்னாள் எம்பி செல்வக்குமார் சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி, மாநகர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம் பேசுகையில், அதிமுக பொன்விழா ஆண்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் எனவும், கட்சியின் மூத்த உறுப்பினர்களை கவுரவித்து விழா எடுக்கப்படும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ரத்தன் பிரித்திவி, இணைச் செயலாளர் நந்தகோபால்,  பெரியார் நகர் பகுதிச் செயலாளர் மனோகரன், அவைத் தலைவர் மீன் ராஜா, முன்னாள் மேயர் மல்லிகா, ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், பகுதிச் செயலாளர்கள் ஜெகதீசன், கேசவமூர்த்தி முன்னாள் கவுன்சிலர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் கட்சி கொடியேற்று விழாவும் நடந்தது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT