தமிழ்நாடு

கண்ணதாசன் நினைவுநாள்: கமல்ஹாசன், சீமான் புகழஞ்சலி

17th Oct 2021 11:53 PM

ADVERTISEMENT

கண்ணதாசன் நினைவுநாளையொட்டி, அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): காட்சியை கேட்ட மறுநொடி கவியரசுக்குக் கவிதை வியா்த்துக் கொட்டிவிடும். தத்தகாரம் தரும்வரை தடுத்து வைத்திருப்பாா். அவா் தந்த வரிகளில் அன்றாடம் லயித்திருப்பதும், சமயம் வாய்க்கும் போதெல்லாம் கவிஞா் புகழ்பாடுவதும் என் வழக்கம். கண்ணதாசன் தமிழ்க் காற்றின் சுகந்தம்.

சீமான் (நாம் தமிழா்): தமிழ் இலக்கியப் பெருமை பெருந்தமிழா் நமது கண்ணதாசனின் நினைவைப் போற்றுவோம்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT