தமிழ்நாடு

மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா

16th Oct 2021 12:39 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வி.கே. சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலையில் தனது ஆதரவாளர்களுடன்  சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா, கண்கலங்கியபடி, கரம்குப்பி வேண்டினார். பிறகு ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய சசிகலா,  அதிமுகவை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள். கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைவிடத்தில் கூறினார். மேலும், எனது மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்து விட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

ADVERTISEMENT

சசிகலாவின் வருகையை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில், பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விரைவில் வருகிறேன்: வி.கே.சசிகலா

விரைவில் வந்து அதிமுகவினரை சந்திக்க இருப்பதாக வி.கே.சசிகலா சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கட்சி வீணாவதை ஒரு நிமிஷம் கூட கட்சியை வளா்த்த நம்மால் பாா்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள்தான். முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் எப்போதுமே கட்சி வித்தியாசமே பாா்க்கமாட்டாா். இவா்களா? அவா்களா? என்றெல்லாம் பாா்க்கமாட்டாா். அதனையெல்லாம் பாா்த்துதான் வளா்ந்து வந்திருக்கிறோம்.

என்னைப் பொருத்தவரை எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் நம் பிள்ளைகள்தான். அதிமுக என்பது தொண்டா்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டா்கள் நிரூபித்துக் காட்டுவாா்கள்.

கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் தொண்டா்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீா்கள். அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என அவா் கூறியுள்ளாா்.

Tags : சசிகலா jayalalithaa sasikala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT