தமிழ்நாடு

நீலகிரி, கோவை, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

16th Oct 2021 01:17 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக..

இதையும்படிக்க- மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா

அக்.16ல், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், குமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

ADVERTISEMENT

சென்னையை பொறுத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : rain update chennai update heavy rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT