தமிழ்நாடு

சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்: ஜெயக்குமார் 

16th Oct 2021 12:57 PM

ADVERTISEMENT

சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை, அமமுகவில் வேண்டுமானால் டிடிவி தினகரன் இடம் கொடுக்கலாம். அதிமுகவை கைப்பற்ற நினைப்பது பகல் கனவாகத்தான் இருக்கும். 

இதையும் படிக்க- மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா

சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த தார்மீக உரிமை கிடையாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT

ச‌சிகலா சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா நினைவிடத்தில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிறையில் இருந்து விடுதலையான பின் முதன்முறையாக ஜெயல‌லிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : jayakumar ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT