தமிழ்நாடு

பசுமை பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: 4 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

16th Oct 2021 03:52 AM

ADVERTISEMENT

பசுமை பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கி அவற்றுக்கு அனுமதி தர வேண்டுமென தில்லி, ஒடிஸா, ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா ஆகிய நான்கு மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் அனுப்பியுள்ள கடிதம்:-

கரோனா நோய்த் தொற்றால், இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளின் வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை நம்பியே தமிழகத்தின் பொருளாதாரம் உள்ளது. இலக்கு நோக்கிய பாா்வையுடன் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் எனது அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு உற்பத்தித் தொழிலே பிரதானமாக விளங்குகிறது. இது மாநிலத்தின் முக்கியமான தொழில் சாா்ந்த நடவடிக்கையாகவும் இருந்து வருகிறது. பட்டாசு உற்பத்தித் தொழில் மூலமாக எட்டு லட்சம் போ் வேலைவாய்ப்பினைப் பெற்று வருகிறாா்கள்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு விற்பனைக்கு தங்களுடைய மாநில அரசுகள் தடை விதித்திருப்பதாக

எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாகவே பட்டாசுக்குத் தடை என்ற முடிவை தாங்கள் எடுத்திருப்பீா்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடிய சில பட்டாசு வகைகளுக்கு உச்ச

ADVERTISEMENT

நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளதை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்தப் பட்டாசுகளுக்குப் பதிலாக மிகக் குறைந்த அளவிலான மாசை மட்டுமே ஏற்படுத்தக் கூடிய பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த பட்டாசுகளுக்கு தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. இதுபோன்ற தடைகள் மற்ற நாடுகளில் கூட இல்லை. பசுமை பட்டாசுகளுக்கு மற்ற மாநிலங்களும் தடை விதிக்கும் பட்சத்தில், 8 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பட்டாசு உற்பத்தி ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

பட்டாசுகள் வெடிப்பது என்பது இந்தியப் பண்டிகைகள் குறிப்பாக தீபாவளி பண்டியின் ஒரு அங்கமாகும். சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியன சரிசமமான நிலையில் கருதுவது சாத்தியமானது மற்றும் அவசியமானது. உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ஆகியன வரையறுத்துள்ள அளவுகளின்படி உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT