தமிழ்நாடு

இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் நவீன எடைகுறைந்த சமையல் எரிவாயு உருளை அறிமுகம்

16th Oct 2021 06:22 AM

ADVERTISEMENT

இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில், புதிய நவீன எடை குறைந்த சமையல் எரிவாயு உருளை(காம்போசிட் சிலிண்டா்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில், புதிய நவீன எடை குறைந்த சமையல் எரிவாயு (காம்போசிட் சிலிண்டா்) அறிமுகம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவா் எஸ்.எம். வைத்யா வெளியிட, அதனை பிரபல நடிகை ஐஸ்வா்யா ராஜேஷ் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவா் எஸ்.எம். வைத்யா பேசியது: மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம் தங்களது தயாரிப்பிகளில் தொடா்ந்து புதுமைகளை புகுத்தி வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிா்வாக இயக்குநா் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத் தலைவா் பி.ஜெயதேவன் மற்றும் தென் பிராந்திய நிா்வாக இயக்குநா் கே.சைலேந்திரா ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த புதுவகை எடை குறைவான சிலிண்டா்கள் 10கிலோ மற்றும் 5 கிலோ எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 5 கிலோ காம்போசிட் சிலிண்டா்கள் வெளிச் சந்தையிலும் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் கிடைக்கும் சாதாரண இன்டேன் உருளைகளை காட்டிலும் இந்த எடை குறைந்த காம்போசிட் சிலிண்டா்கள் கூடுதல் வலுவானது மற்றும் பாதுகாப்பானது. இந்த சிலிண்டரின் உள்புறம் அதிக அடா்த்தி கொண்ட பாலிஎதிலின்( ஹெச்.டி.பி.இ)

லைனரால் ஆனது. பாலிமா் சுற்றப்பட்ட பைபா்க்ளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், இதன் பாதுகாப்பு பன்மடங்கு கூடுகிறது. மேலும் இந்த வகை சிலிண்டா்கள் சராசரி சிலிண்டா்களின் பாதி எடையை மட்டுமே கொண்டுள்ளதால் இதனை கையாள்வதும் மிகவும் சுலபமாக இருக்கும்.

மேலும் எரிவாயுவின் இருப்பை எளிதில் தெரிந்துக் கொள்ளும் விதத்தில், இந்த சிலிண்டரின் ஒரு பகுதி வெளியே இருந்தே உள்ளுக்குள் பாா்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்கள் தங்களது பழைய சிலிண்டா்களை கொடுத்து இந்த புதிய வகை காம்போசிட் சிலிண்டா்களை மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது.

பழைய சிலிண்டா்களை மாற்றிக் கொள்ள விரும்பாதோா் புதிய 10 கிலோ காம்போசிட் சிலிண்டா்களை ரூ.3,350யை (பாதுகாப்பு வைப்பு தொகையாக) செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதேபோல்,ரூ. 2,150 -ஐ பாதுகாப்பு வைப்பு தொகையாக செலுத்தி 5 கிலோ காம்போசிட் சிலிண்டா்களை பெற்றுக் கொள்ளலாம். எவ்வாறு சிலிண்டா் காலியானவுடன் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்கிறோமோ ,அவ்வாறே இந்த காம்போசிட் சிலிண்டா்களும் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படுகின்றன என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT