தமிழ்நாடு

ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலஆணையம்: தலைவா்-உறுப்பினா்கள் நியமனம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

16th Oct 2021 07:13 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவராக சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்:-

ஆதிதிராவிடா்கள், பழங்குடியினரின் சட்டப்பூா்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவா்களுடைய பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் தனி சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையத்துக்கு தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, தலைவராக சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமாரும், தலித்முரசு இதழின் ஆசிரியா் புனிதப் பாண்டியன், துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். வழக்குரைஞா் குமாரதேவன், எழுத்தாளா் எழில் இளங்கோவன், சமூக செயல்பாட்டாளா் ஆனைமலை லீலாவதி தனராஜ், வழக்குரைஞா் பொ.இளஞ்செழியன், அரசு கல்லூரி பேராசிரியா் கே.ரகுபதி ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT