தமிழ்நாடு

தகரப் புதூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

9th Oct 2021 10:40 AM

ADVERTISEMENT


தம்மம்பட்டி:  தம்மம்பட்டி பகுதிகளில் பெருமாள் கோயில்களில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  

தம்மம்பட்டி ஸ்ரீ உக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில், சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. அதேபோல் தம்மம்பட்டி பெருமாள் மலையிலுள்ள ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயிலிற்கு நூற்றுக்கணக்கானோர் மக்கள் மலை ஏறி வழிபாடு செய்தனர்.   

தம்மம்பட்டி அருகே தகரப் புதூரிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்வாமிக்கும் பூதேவி, ஸ்ரீதேவிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. 

மேலும் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, வாரணமாயிரங்களை பாடினர். இங்கு பெருமாளுக்கு புதியதாக கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்யவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.   

ADVERTISEMENT

மேலும் செந்தாரப் பட்டி, வீரகனூர் , தெடாவூர், நாகியம்பட்டி, கீரிப்பட்டி ஊர்களிலுள்ள பெருமாள் கோயில்களில் 4 ஆம் சனிக்கிழமை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT