தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திருப்பூர் மாவட்டத்தில் 13 சதவிகித வாக்குப்பதிவு

9th Oct 2021 11:31 AM

ADVERTISEMENT

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 12 பதவிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி, 13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, 12 பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள சார் வழங்கும் வாக்கு சாவடி ஊழியர்கள்.

இதன்படி, காங்கயம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சியின் 10 ஆவது வார்டு உறுப்பினர், தாராபுரம் ஒன்றியத்தில் 12 ஆவது வார்டு உறுப்பினர், அவிநாசி ஒன்றியத்தில் கருவலூர் ஊராட்சித் தலைவர், மூலனூர் ஒன்றியத்தில் எரசினாம்பாளையம் ஊராட்சித் தலைவர், உடுமலை ஒன்றியத்தில் எஸ்.வேலூர் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 12 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 140 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 39,079, பெண் வாக்காளர்கள்41,509, மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 80,592 பேர் வாக்களிக்கவுள்ளனர். 
இந்த நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 9 மணி வரையில் பதிவான வாக்குபதிவு விவரத்தை மாவட்ட நிர்வாகம் காலை 10.30 மணியளவில் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, மாவட்டம் முழுவதும் 6,197 ஆண்களும், 4,275 பெண்கள் என மொத்தம் 10,472 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி மாவட்டத்தில் 13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT