தமிழ்நாடு

ஜெயலலிதா, சசிகலாவின் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்

9th Oct 2021 04:12 PM

ADVERTISEMENT


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

வரிபாக்கி நிலுவையில் இருந்த நிலையில், 2 எஸ்டேட் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வருமான கணக்கைக் குறைத்துக் காட்டியதால் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், கோத்தகிரி பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு எஸ்டேட் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT