தமிழ்நாடு

சீர்காழி பகுதியில் திடீர் பலத்த மழை: அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் சேதம்

9th Oct 2021 10:20 AM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி பகுதியில் பெய்த திடீர் பலத்த மழையால் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. 

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த  கனமழை பெய்தது. 

அதன்பின்னர் இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்த திடீர் மழையால் சீர்காழி, கொண்டல் , அகணி , வள்ளுவக்குடி, நிம்ம்ம்லி , திருப்புங்கூர், புங்கனூர், வைத்தீஸ்வரன்கோயில், எடக்குடி வடபாதி, காரைமேடு, மங்கைமடம், திருவெண்காடு, கொள்ளிடம், வடரங்கம் ,வடகால், கட வாசல், ஆரப்பள்ளம், ஆர்பாக்கம், நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த கனமழையால்  இறுதிகட்ட அறுவடை பணிகள் நடைபெற்ற பகுதியில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முற்றிய பயிர்களை மழையால் சாய்ந்துள்ளது.

ADVERTISEMENT

அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் எடுத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்கள் வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே திடீர் கனமழையால் கொள்ளிடம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை காலை வரை மின்சாரம் வராததால் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியாமல் குடிநீர் தட்டுப்பாடும், மற்ற தண்ணீர் சேவையும் பாதிப்படைந்துள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT