தமிழ்நாடு

ஏசியில் மின் கசிவு: தீ விபத்தில் தம்பதியர் சாவு

9th Oct 2021 12:56 PM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை ஆனையூர் பகுதியில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி சாதனம் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சனிக்கிழமை அதிகாலை தம்பதி உயிரிழந்தனர். 

ஆனையூர் எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன் (45). தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குழந்தைகள் இருவரும் கீழே உள்ள அறையில் வெள்ளிக்கிழமை இரவு உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர். 

ADVERTISEMENT

ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் அறையில் இருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து சேதமானது.

இந்நிலையில், நள்ளிரவில் சக்தி கண்ணன், அவரது மனைவி இருந்த அறையில் உள்ள ஏசியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனால் அறையில் சிக்கிக் கொண்ட இருவரும் தீயில் சிக்கி இறந்தனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்துக்குள்ளான வீட்டின் முன் பகுதி.

மேலும் அவர்கள் வீட்டுக்குள் வந்து கீழ் அறையில் இருந்த இரு பிள்ளைகளயும் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனக்கு அனுப்பினர்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT