தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

9th Oct 2021 01:42 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

அக். 09ல்.. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.]

எங்கெல்லாம் மழை பெய்யும்?

அக். 10.. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

ADVERTISEMENT

அக். 11.. கோவை, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

அக். 12, 13 ஆகிய தேதிகளில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை 
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT