தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல்

9th Oct 2021 11:25 AM

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சிப் பதவிகளுக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 13 ஆவது வார்டு, பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 11 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வில்பட்டி, சத்திரப்பட்டி, பழனி அடுத்துள்ள ஆண்டிப்பட்டி, ஆவிளிப்பட்டி ஆகிய ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  

அதேபோல் ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் தலா 3, திண்டுக்கல் மற்றும் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் தலா 2, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர், சாணார்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலா 1 என மொத்தம் 22 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

15 பதவிகள் போட்டியின்றி தேர்வு: இதில், ஆண்டிப்பட்டி மற்றும் ஆவிளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன.  

ADVERTISEMENT

அதேபோல் சீவல்சரகு 1 ஆவது வார்டு, பி.விராலிப்பட்டி 5 ஆவது வார்டு, மல்லபுரம் 7 ஆவது வார்டு, கோட்டூர் 12 ஆவது வார்டு, பச்சமலையான்கோட்டை 5 ஆவது வார்டு, எத்திலோடு 6 ஆவது வார்டு, லக்கையன்கோட்டை 3 ஆவது வார்டு, கேதையறும்பு  2 ஆவது  வார்டு, தங்கச்சியம்மாப்பட்டி 1 ஆவது வார்டு,  அழகுப்பட்டி 9 ஆவது  வார்டு, ராஜாக்காப்பட்டி  3 ஆவது  வார்டு, தேவத்தூர் 2 ஆவது  வார்டு,  சுக்காம்பட்டி 8 ஆவது வார்டு ஆகிய 13  பதவிகளுக்கான உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

13 பதவிகளுக்கு போட்டி: அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஒன்றியம் 13 ஆவது வார்டு உறுப்பினர், பழனி ஒன்றியம் 11 ஆவது வார்டு உறுப்பினர், வில்பட்டி, சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு அக்கரைப்பட்டி 6 ஆவது வார்டு, வீரக்கல் 7 ஆவது  வார்டு, செக்காப்பட்டி 1 ஆவது வார்டு, கணவாய்ப்பட்டி 4 ஆவது வார்டு, செட்டிநாயக்கன்பட்டி 9 மற்றும் 15 ஆவது வார்டு, டி.கூடலூர் 8 ஆவது வார்டு, அம்பளிக்கை 5 ஆவது வார்டு, விருதலைப்பட்டி 5 ஆவது வார்டு பதவிகளுக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

2 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேர், 2 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிளுக்கு 6 பேர், 13 ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 28 பேர் என மொத்தம் 45 வேட்பாளர்ள் களத்தில் உள்ளனர்.

இடைத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கியது.

ஊராட்சி ஒன்றியக் குழு  உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் நடைபெறும் இடங்களில்  வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

ஊராட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT