தமிழ்நாடு

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவா் ஐசரி கே.கணேஷ்

9th Oct 2021 06:15 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தா் ஐசரி கே.கணேஷ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவா் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தோ்தலில் இந்த முறை இச்சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கங்களால், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனா், வேந்தா் ஐசரி கே.கணேஷ் ஒருமனதாக தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

15 ஆண்டுகளுக்கு மேல் ஐசரி கே.கணேஷ், இச்சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT