தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,359 பேருக்கு கரோனா பாதிப்பு

9th Oct 2021 06:31 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 1,359 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 4.81 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26 லட்சத்து 75,592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 169 பேரும், கோவையில் 140 பேரும், செங்கல்பட்டில் 103 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,473 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26.23 லட்சத்தைக் கடந்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,379-ஆக உள்ளது.

மற்றொரு புறம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 20 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,754-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT