தமிழ்நாடு

சென்னை-மங்களூரு விரைவு சிறப்பு ரயில்

9th Oct 2021 06:04 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூா்-மங்களூரு சென்ட்ரல் இடையே முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நாள்தோறும் இரவு 11.35 மணிக்கு விரைவு சிறப்பு ரயில் (06159) புறப்பட்டு, மறுநாள் இரவு 10.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும். இந்த ரயில் சேவை அக்.17-ஆம் தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, மங்களூரு சென்ட்ரலில் இருந்து நாள்தோறும் காலை 6.45 மணிக்கு விரைவு சிறப்பு ரயில் (06160) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் சேவை அக்.19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை (அக்.9) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT