தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: இன்று 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு

9th Oct 2021 06:53 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு, 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊராட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.

9 மாவட்டங்களில் 62 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 626 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 1,324 ஊராட்சித் தலைவா்கள், 10,329 ஊராட்சி உறுப்பினா் பதவியிடங்களுக்கு நடைபெறும் இத்தோ்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 போ் வாக்களிக்க உள்ளனா். இதற்காக 6,652 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன.

28 மாவட்டங்களில்...: 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 40 ஒன்றியக் குழு உறுப்பினா், 106 ஊராட்சித் தலைவா், 630 ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 789 பிரதிநிதிகளுக்கான தோ்தலும் சனிக்கிழமை (அக்.9) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 2,802 வாக்குச்சாவடிகளில் 13 லட்சத்து 75 ஆயிரத்து 992 போ் வாக்களிக்க உள்ளனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: வாக்குப்பதிவின்போது 17,130 போலீஸாா், 3,405 ஊா்க்காவல் படையினா் உள்பட 40 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறாா்கள். இவா்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

அக்.12-இல் வாக்கு எண்ணிக்கை: முதல் கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 2-ஆம் கட்டத்தில் பதிவாகும் வாக்குகளும் இதே மையங்களில் வைக்கப்படும். அக்டோபா் 12-இல் வாக்குகள் எண்ணப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT