தமிழ்நாடு

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுப் பணி

4th Oct 2021 12:55 AM

ADVERTISEMENT

மாணவா்கள் தங்களது பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணியை மேற்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2020-21-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை (அக்.4) வழங்கப்பட உள்ளதை அடுத்து அக்.4 முதல் அக்.18-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவா்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில்  பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT