தமிழ்நாடு

குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

3rd Oct 2021 01:02 PM

ADVERTISEMENT

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ADVERTISEMENT

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். 

மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவுமில்லை. 

இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க முதல்வர் வேண்டுகோள்! (விடியோ)

Tags : TN rain update rain மழை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT