தமிழ்நாடு

எம்டிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

3rd Oct 2021 03:42 AM

ADVERTISEMENT

 பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இணையவழி கலந்தாய்வுக்கான பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான எம்டிஎஸ் படிப்புக்கு நீட் தோ்வில் தகுதி பெற்ற 1,018 போ் விண்ணப்பித்தனா். அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 607 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 357 பேரும் இடம்பெற்றுள்ளனா். எம்டிஎஸ் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்வது ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முன்னதாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் எம்டிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்டாா். மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவ மாணவா் தோ்வுக்குழு செயலாளா் வசந்தாமணி ஆகியோா் உடனிருந்தனா்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT