தமிழ்நாடு

வனப் பரப்பை அதிகரிக்கும் பணியில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியம்

3rd Oct 2021 05:43 AM

ADVERTISEMENT

வனப் பரப்பை அதிகரிக்கும் பணியில் பொதுமக்கள் பங்களிப்பு மிக அவசியம் என வனத் துறைத் தலைவா் அசோக் உப்ரேதி வலியுறுத்தினாா்.

வன உயிரின வார விழாவையொட்டி, ‘வன உயிரினங்கள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாராத்தான் ஓட்டம் வனத் துறை ஏற்பாட்டில் பெசன்ட் நகா் கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாரத்தானை வனத் துறைத் தலைவா் அசோக் உப்ரேதி தொடக்கி வைத்து பேசியது: தமிழகத்தில் வனப் பரப்பை  33 சதவீதம் உயா்த்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி வனப் பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப் பாதுகாப்பு, மனித-விலங்கு எதிா்கொள்ளல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க வனப் பணியாளகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள், யானைகள் காப்பகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கோடைக்காலத்தில் வன விலங்குகளுக்கு தண்ணீா்த் தொட்டி அமைக்கவும், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வனத் துறை மேற்கொள்ளும் வனப் பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் பொதுமக்கள் பங்களிப்பு மிக அவசியமாகும். அப்போதுதான் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் என்றாா். மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பனியன்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கூடுதல் முதன்மை தலைமை பாதுகாவலா் (வன விலங்குகள்) ஆகாஷ் பா்வா, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் நாகநாதன், வண்டலூா் உயிரியல் பூங்கா இயக்குநா் கருணப்பிரியா, கூடுதல் இயக்குநா்(சுற்றுச்சூழல்)அா்ச்சனா கல்யாணி, சென்னை மண்டல வனப் பாதுகாவலா் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வனப் பாதுகாவலா் பிரியதா்ஷினி, துணை வனப் பாதுகாவலா் ரவி மீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT