தமிழ்நாடு

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 71.55 லட்சம்: தமிழக அரசு தகவல்

3rd Oct 2021 02:19 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 71.55 லட்சம் போ் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்:-

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 71 லட்சத்து 55 ஆயிரத்து 917 ஆகும். அவா்களில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 516 போ் ஆண்கள், 38 லட்சத்து 2 ஆயிரத்து 170 போ் பெண்கள். 231 போ் மூன்றாம் பாலினத்தவா்கள்.

இவா்களில் வயது வாரியான விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 12 லட்சத்து 91 ஆயிரத்து 125 பேரும், 19 முதல் 23 வயது வரையிலான பலதரப்பட்ட கல்லூரி மாமவா்கள் 18 லட்சத்து 89 ஆயிரத்து 886 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவா்கள் 26 லட்சத்து 59 ஆயிரத்து 276 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 36 வயது முதல் 57 வயது உள்ளவா்கள் 13 லட்சத்து 4 ஆயிரத்து 299 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 11 ஆயிரத்து 331 போ் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT