தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க முதல்வர் வேண்டுகோள்! (விடியோ)

3rd Oct 2021 12:50 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலைப் போல ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக். 6, 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கட்சிகளின் தலைவர்கள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவைத் தேர்தலைப் போல ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வைத்தீர்கள். அதன்படி கடந்த மே 7 ஆம் தேதி முதல்வராக நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். பொறுப்பேற்றது முதல் இன்றுவரை உங்களுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். 

அதுபோல ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நல்லாட்சி மலர திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். எங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். 

Tags : localbody election mk stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT