தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

3rd Oct 2021 08:15 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 72.86அ டியிலிருந்து 73.86 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,440 கன அடியிலிருந்து 14,192 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 350 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 35.94 டி.எம்.சி ஆக இருந்தது. 

ADVERTISEMENT

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT