தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம்

3rd Oct 2021 12:55 PM

ADVERTISEMENT


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் சுகாதார துறை சார்பில் தீவிர தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார் ஐஆர்எஸ், ராமன், தொழுநோய் பிரிவு மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் ஸ்ரீதேவி பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற தொழுநோயாளிகளுக்கு தொழுநோயை குணப்படுத்தும் நவீன மருத்துவ முறைகளை சுகாதார துறையினர் விளக்கினர். தொழுநோயாளிகள் வாழ்வில் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கை திரும்ப அடைய முடியும் என நந்தகுமார் ஐஆர்எஸ் பேசினார்.

ADVERTISEMENT

காந்தி ஜயந்தியையொட்டி, தொழுநோயாளிகளுக்கு  மருத்துவ உபகரணங்கள், மளிகை பொருள்கள், அரிசி வழங்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் காந்தி ஜயந்தியையொட்டி, தொழுநோயாளிகளுக்கு  மருத்துவ உபகரணங்கள், மளிகை பொருள்கள், அரிசி வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் தொழுநோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்வையொட்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தொழுநோயாளிகள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்வில் மருத்துவர் சுகன்யா, கிராம சுகாதார செவிலியர் சூர்யா கிறிஸ்டி, என்எம்ஸ் சரவணராஜன் உள்ளிட்ட சுகாதார துறையினர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT