தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளர்கள் 72 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

3rd Oct 2021 01:25 PM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்கள் 72 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

கூத்தாநல்லூர் நகராட்சியில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு, கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, ஆணையர் ராஜகோபால் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார்  முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 72 தூய்மைப் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை ஆணையர் ராஜகோபால் வழங்கினார். 

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் நகராட்சியில் கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழாவில், ஆணையர் ராஜகோபால் தூய்மைப் பணியாளர்கள் 72 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது: கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதிக்குள்பட்ட 24 வார்டுகளிலும், குப்பைகள் தேங்காதபடி அள்ளப்பட்டது. சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்காமல் கழிவுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அனைத்து இடங்களிலும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, கிருமி நாசினி தெளித்தனர். தொய்வு இல்லாமல் தொடர்ந்து தூய்மைப் பணிகளைச் செய்து வரும் அனைவரையும் பாராட்டுகிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியில், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், அண்ணாமலை, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நிஷா, தீபா, செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : கூத்தாநல்லூர் நகராட்சி certificates Issuance 72 cleaners
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT