தமிழ்நாடு

கூத்தாநல்லூர் திமுக நகரச் செயலாளர் காலமானார்

3rd Oct 2021 08:59 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் திமுக நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர் உசேன் (48) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) காலை காலமானார். 

காதர் உசேன்,  உடல் நிலைக் குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். 

மறைந்த காதர் உசேன் திமுக மீது தீவிர பற்றுக் கொண்டவர். நகர இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட தொண்டரணி நிர்வாகி, நகர மன்ற உறுப்பினர், நகர மன்ற துணைத் தலைவர், நகரச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் திமுகவுக்காகப் பணியாற்றியுள்ளார். 

ADVERTISEMENT

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின், திருவாரூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்டதாகும் கூத்தாநல்லூர். 

மறைந்த நகரச் செயலாளர் காதர் உசேனுக்கு, யாஸ்மின் என்ற மனைவியும், அஸ்பர் அலி (19) மற்றும் அப்ஸின் (16) உள்ளிட்ட இரண்டு மகன்களும் உள்ளனர். 

அவரது, உடல் திருச்சி தனியார் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்டு, கூத்தாநல்லூர், நேருஜி சாலை, அப்துர் வாஹித் தெரு அவரது இல்லத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. 

இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, மாலை 4 மணிக்கு, பெரியப் பள்ளிவாயில், மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

தொடர்புக்கு - 812484 6336.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT