தமிழ்நாடு

குமுளியில் விரைவில் பேருந்து நிலையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

3rd Oct 2021 12:44 PM

ADVERTISEMENT

 

கம்பம்: தமிழக எல்லையான குமுளியில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், கம்பத்தில் நான்காவது தடுப்பூசி முகாமை மாநில மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். முகாமில் அவர் பேசும்போது, தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது, மாநில அளவில் முதல் முகாமில் 28 லட்சம் பேர்,  இரண்டாவது முகாமில் 16 லட்சம் பேர்களும், மூன்றாவது முகாமில் இருபத்தி ஆறு லட்சம் பேர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தேனி மாவட்டத்தை பொறுத்த அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,44558 பேர்களில் முதல் தவணை தடுப்பூசி யை, 5,72,302  பேர் செலுத்தி கொண்டுள்ளனர், இரண்டாவது தடுப்பூசியை 2,05 549 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். மாநில அளவில் இது குறைவு என்றாலும் அடுத்த முறை அதிக அளவில் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி கூறியுள்ளார். தேவைப்படும் பட்சத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் தேனி மாவட்டத்திற்கு வழங்கப்படும் என்றார்.

ADVERTISEMENT

பின்னர் தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளிக்கு சென்றார், அங்கு சுகாதாரத்துறை அமைத்துள்ள முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான குமுளியில் பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்படும், அதற்காக போக்குவரத்துகழகம்,  வனத்துறை மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி  மகாராஜன், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் தில்லி சிறப்பு பிரதிநிதி பெ.செல்வேந்திரன் உள்ளிட்ட திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

தமிழக எல்லைப் பகுதியான குமுளியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தை பார்வையிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT