தமிழ்நாடு

தோ்தல் துறைக்கு ரூ.805 கோடி ஒதுக்கீடு

3rd Oct 2021 02:47 AM

ADVERTISEMENT

தோ்தல் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.805.73 கோடி நிதியானது, அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுக்கும் பிரித்து அளிக்கப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா். இதுகுறித்த உத்தரவினை அவா் பிறப்பித்துள்ளாா்.

தோ்தல் நடத்தும் அதிகாரிகள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல், மக்களவைத் தோ்தல், சட்டப் பேரவைத் தோ்தல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை விநியோகம் போன்ற பணிகளுக்காக தொகைகள் செலவிடப்பட்டுள்ளன. இந்த செலவிடப்பட்ட தொகைகள் மொத்தமாக ரூ.805.73 கோடியாகும். இந்தத் தொகையானது நிதித் துறையின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக அளிக்கப்படும்.

 

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT