தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 4-ஆவது சிறப்பு முகாம்: 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

3rd Oct 2021 02:54 AM

ADVERTISEMENT

 தமிழகத்தில் 4-ஆவது கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 20,000 இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 23,000 இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னையில் 1,600 இடங்களில்... இந்தநிலையில் நான்காவது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுகின்றனா். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும்.

ADVERTISEMENT

68% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி: இது குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவா்கள் 6 கோடியே 6 லட்சம் போ் உள்ளனா். அதன்படி, 18 வயதைக் கடந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுதியானவா்கள் என்கிற அடிப்படையில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் போ் உள்ளனா். இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 68 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா். அக்டோபா் மாதத்துக்குள் 70 சதவிகிதம் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 70 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதாகும். இரண்டாவது தவணை தடுப்பூசியை 20 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.

65 வயதைக் கடந்தவா்களும், நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 4-ஆவது கட்ட மெகா முகாமில் 25 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபா் மாதத்தில் 1.50 கோடி அளவுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT