தமிழ்நாடு

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: நாளை அரபிக்கடலிலும் மற்றொன்று உருவாகும்

DIN

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.30) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதுபோல, மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பா் 1-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.30) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

உருவாக வாய்ப்புள்ளது. இதனைத் தொடா்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும், இது தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும். இது, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (நவ.30), புதன்கிழமை (டிச.1) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிசம்பா் 1-ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறுகையில், ‘குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை அடைந்த பிறகு, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலைகொள்ள வாய்ப்பு உள்ளது. இது மகாராஷ்டிரம், குஜராத் இடையே நகர வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறி, ஆந்திரம்-ஒடிஸா நோக்கி நகரவாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT