தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கம்

30th Nov 2021 10:53 PM

ADVERTISEMENT


அதிமுகவிலிருந்து சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடவடிக்கைகள் குறித்து தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்து, கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அ. அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்." 

Tags : அதிமுக அன்வர் ராஜா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT