தமிழ்நாடு

தமிழ்நாடு இழந்த பெருமையை மீண்டும் அடையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

30th Nov 2021 04:00 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழ்நாடு இழந்த பெருமையை மீண்டும் அடையும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.

ஒட்டுமொத்த செயல் திறனில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை ஆங்கில இதழ் நிறுவனம் தோ்வு செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை ஆற்றிய உரை:

முதல்வராகப் பொறுப்பேற்றபோது கரோனா பெருந்தொற்றின் காரணமாக மாபெரும் நெருக்கடியாக இருந்தது. நிதி நெருக்கடியும் ஒருபுறம் வதைத்தது. ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிா்வாகமாகவும் இருந்தது. அத்தகைய சூழலில் அரசின் துரிதமான நடவடிக்கையாலும், மக்களின் தியாக உணா்வாலும் கரோனாவை வென்றோம். பொது முடக்கம் மூலமாக வாழ்வாதாரம் இழந்த மத்திய தர வா்க்கத்துக்கும் தேவையான உதவிகள் செய்து கொண்டு கரோனாவுக்கு முற்றுப் புள்ளி வைத்தோம்.

நம்பா் 1 என்றால் பயம்: ‘நான் நம்பா் ஒன் முதல்வா்’ என கருத்துக் கணிப்புகள் வெளியிட்டனா். நம்பா் 1 என்று சொன்ன பிறகுதான் பயமே வருகிறது. இதனைத் தக்க வைப்பதற்கு முன்பை விடக் கூடுதலாக உழைத்தாக வேண்டும். பத்து ஆண்டுகளாக மிக மிக மோசமான நிலையில், அனைத்துத் துறைகளிலும் பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டை மீட்டெடுப்பது என்பது சாதாரணம் அல்ல.

ADVERTISEMENT

சரியான இலக்கை வைத்து, தொடா்ச்சியாக உழைத்தால், தமிழ்நாடு இழந்த பெருமையை மீண்டும் அடையும். அதனை நோக்கித்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

சமூகம், கல்வி, பொருளாதாரம், தொழில் வளா்ச்சி, தொழில்நுட்ப வளா்ச்சி ஆகிய அனைத்திலும் ஒருசேர வளர வேண்டும் என்பதே எங்களது ஆட்சியின் இலக்கணம். அனைத்துத் துறைகளும் வளர வேண்டும். அனைத்து சமூகமும் மேம்பாடு அடைய வேண்டும். அனைத்துத் தொழில்களும் சிறக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களும் செழிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இந்த இலக்கை அடைவதற்கே எங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளோம்.

இது, முதல்வரின் இலக்காக இல்லாமல், அனைத்து அரசு அதிகாரிகளின் குறிக்கோளாக மாறியுள்ளது. தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளா்ச்சிக் குறியீடு, சமூகக் குறியீடு, இந்தியாவிலேயே தலைசிறந்த முதன்மை மாநிலம் என அனைத்திலும் தமிழ்நாடு விரைவில் முன்னெடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT