தமிழ்நாடு

மழை வெள்ளத்தில் சீர்காழி சட்டநாதர் திருக்கோவில்

29th Nov 2021 02:44 PM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி சட்டைநாதர் கோவில், திருக்கருக்காவூர் வெள்விடைநாதர் கோயில்களில் மழை நீர் புகுந்தது.

வடகிழக்குப் பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT


இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மூன்று நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சீர்காழி பகுதியிலும் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பகல் மற்றும் இரவு தொடர்ந்து அதிக மழை கொட்டித் தீர்த்தது. 

இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான்: டெல்டா-வை விட 6 மடங்கு பரவும் திறன்; தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்

 


இதனால் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில், புதுப்பட்டினம். பழையாறு, திருமுல்லைவாசல், எடமணல், வடகால், கடவாசல், நல்லூர், திருப்புன்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் மழைநீரில் மீண்டும் மூழ்கியுள்ளது. மறு நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாலும் தொடர்ந்து இடைவிடாது பெய்து வருவதாலும், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். 

சீர்காழி நகரின் நகர்ப் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயிலில் மழைநீர் புகுந்தது. 

இதையும் படிக்கலாமே.. ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்: வானிலை மையம்

இக்கோயிலிலுள்ள திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய பிரம்ம தீர்த்தக்குளம் மழைநீரால் முழுவதும் நிரம்பியது. இதனால் கோயில் குளத்திற்கு வரும் மழைநீர் பாதை வழியாக கோவிலில் சிவன் சன்னதி உட்பிரகாரம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. 

திருக்கருகாவூர் வெள்விடைநாதர் கோயில்

இதனால் கோவிலுக்கு  கார்த்திகை சோமவார வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் மழை நீரில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சீர்காழி அருகேயுள்ள திருக்கருகாவூர்  வெள்விடை நாதர் திருக்கோயிலிலும் மழைநீர் புகுந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.
 

Tags : சீர்காழி சட்டநாதர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT