தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

29th Nov 2021 07:43 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கடந்த சில நாள்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகின்றது. 

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், சேலம், அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Rain school holiday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT