தமிழ்நாடு

இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்: ரயில்வேத் துறை அறிவுறுத்தல்

29th Nov 2021 08:23 PM

ADVERTISEMENT


ரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என ரயில்வேத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரபூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் எனவும் ரயில்வேத் துறை விளக்கம் அளித்துள்ளது.

படிக்கஎந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: முழுப் பட்டியல்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரயில்வேத் துறையில் பணி செய்ய பணியாளர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். 

ADVERTISEMENT

இதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. அவர்களை நம்பி ஏமாறவேண்டாம். யாராவது ரயில்வேயில் வேலைவாங்கித் தருகிறேன் என பணம் கேட்டால் தெற்கு ரயில்வே ஊழல் தடுப்புப்பிரிவு அலைபேசி எண் 90031 60022 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Tags : Railway Home ரயில்வே பணி அரசுப் பணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT