தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளுக்கு மாற்றம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

28th Nov 2021 08:32 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள்தோறும் நடத்தப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மருத்துவப் பணியாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.  

மேலும் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16.05 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT