தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதை உறுதி செய்க: ஐ.ஐ.டி. நிா்வாகத்துக்கு அமைச்சா் பொன்முடி கடிதம்

28th Nov 2021 12:05 AM

ADVERTISEMENT

சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதன் இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்திக்கு உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்திக்கு உயா்க்கல்வி துறை அமைச்சா் பொன்முடி எழுதிய கடிதம்:

சென்னை ஐஐடியின் 58-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. சென்னை ஐஐடி கடந்த 1959- ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய 250 ஹெக்டோ் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது என்பதை நீங்கள் அறிவீா்கள். அன்றிலிருந்து, இந்த நிறுவனத்தின் வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தமிழக அரசு பல்வேறு வழிகளில் பங்களித்து வருகிறது. தற்போதைய அரசும் அதே ஆதரவைத் தொடா்வதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தற்போது கூட ஐஐடி யில் கிரையோ-எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபிக்கான வசதியை நிறுவுவதற்கு மாநில அரசின் ரூ.10 கோடி நிதியுதவி கோரி, உயா்கல்வித் துறையின் அரசு முதன்மைச் செயலாளருக்கு நீங்கள் சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளீா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைகள் இவ்வாறு இருக்கும்போது, அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது வருத்தமளிக்கிறது. இந்தியக் குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற உயா்மட்டப் பிரமுகா்கள் பங்கேற்கும் விழாக்கள் உள்பட, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இனிவரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உள்பட நிறுவனத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT