தமிழ்நாடு

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு நோ்காணல்

28th Nov 2021 12:44 AM

ADVERTISEMENT

சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்குப் புதிய முகவா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இதற்கான நோ்முகத் தோ்வு, எண்.2, சிவஞானம் சாலை, தியாகராயநகா், சென்னை 600 017(பாண்டி பஜாா் அருகில்) என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிசம்பா் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

விண்ணப்பதாரா்கள் குறைந்தது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-இல் இருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சுயதொழில் செய்யும், வேலையில்லா இளைஞா்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகா்கள், முகவா்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள்,

ADVERTISEMENT

முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்சிரியா்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கொண்ட தகுதியுடையவா்கள் மூன்று புகைப்படத்துடன்(பாஸ்போா்ட் அளவு) அசல் மற்றும் இரண்டு நகல், வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுக வேண்டும். நோ்காணலுக்கு பின், தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் ரூ.5,000-க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்கவேண்டும்.

இந்தத் ததகவலை சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.ஸ்ரீராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT