தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்!

28th Nov 2021 02:36 PM

ADVERTISEMENT

 

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை திங்கள்கிழமை(நவ.29) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் செவ்வாய்கிழமை(நவ.30) ஆம் தேதி உருவாகிறதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரம்-ஒடிசா இடையே கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT