தமிழ்நாடு

நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

28th Nov 2021 09:24 PM

ADVERTISEMENT

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கரோனாவால் உயிருக்கு போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தமிழ் மற்றும் தெலுகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். இவர் தமிழில் திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தெலங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் காலமானார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT