தமிழ்நாடு

திருவள்ளுர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை: ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரிப்பு

DIN


திருவள்ளுர்: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் சாலை தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.   
   
தற்போதைய நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த 3 நாள்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு மற்றும் திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. 

இதனால், இந்த மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதேபோல், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

மழை அளவு: அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: பொன்னேரி-59, செங்குன்றம்-52, சோழவரம்-51, திருவள்ளூர்-36, ஆவடி-33, தாமரைபாக்கம்-32, திருத்தணி-24, கும்மிடிப்பூண்டி-23, ஊத்துக்கோட்டை, பூண்டி தலா-21, திருவாலங்காடு-20, ஜமீன்கொரட்டூர்-18, பூந்தமல்லி-16, ஆர்.கே.பேட்டை-14, பள்ளிப்பட்டு-5 என மொத்தம் 425 மி.மீ, சராசரியாக-28.33 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.      

இதையும் படிக்க |  ஒமைக்ரான் வகை கரோனாதென் ஆப்பிரிக்க அதிபா் அவசர ஆலோசனை                       
 
ஏரிகளில் நீர்ம்டடம்:
இந்த தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது 2709 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ள நிலையில், 4253 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்படும். 

செங்குன்றம் ஏரியில் 2831 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ள நிலையில், 1695 கன அடிநீரும், சோழவரம் ஏரியில் 851 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில் 1415 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடி இருப்புள்ள நிலையில் 156 கன அடி என உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT