தமிழ்நாடு

வாழப்பாடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் பேரணி

28th Nov 2021 01:51 PM

ADVERTISEMENT


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஞாயிற்றுக்கிழமை கண்டன பேரணி மற்றும் மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இதையும் படிக்க |  7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் செயல்படும் அரசு தமிழ்ப்பள்ளி: தமிழர்கள் அதிர்ச்சி

இப்பேரணிக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாராம் வரவேற்றார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனான, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் இராம சுகந்தன் பேரணியை தொடக்கி வைத்தார்.

ADVERTISEMENT

இந்தப் பேரணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா, முனுசாமி, சதீஷ்குமார், செந்நிலவன், கோவிந்தராஜ், பிரபாகரன்,  முரளிதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க |  ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

இப்பேரணியில், விலைவாசி உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, மத்திய அரசின் நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென கோஷமிட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நிறைவாக, ஆனந்தன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT