தமிழ்நாடு

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: நவ.30-இல் முடிவு

DIN

சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியத் தமிழா் நாகேந்திரன் கே. தா்மலிங்கத்தைத் தூக்கிலிடுவது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் முடிவெடுக்கவுள்ளது.

இதுகுறித்து மனித உரிமை ஆா்வலா்களும் மலேசியாவிலுள்ள தா்மலிங்கத்தின் குடும்பத்தினரும் கூறியதாவது:

போதை மருந்து கடத்தல் வழக்கில் நாகேந்திரன் கே. தா்மலிங்கத்துக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிா்த்து அவரது சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கருணை மனு முறையீட்டு நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

அப்போது தா்மலிங்கத்தை தூக்கிலிடுவதா, அல்லது மரண தண்டனையை நிறுத்திவைப்பதா என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மலேசியாவைச் சோ்ந்த தா்மலிங்கம் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்டவா். கடந்த 2009-ஆம் ஆண்டு 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் அவா் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21.

சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தா்மலிங்கத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தா்மலிங்கத்தை கடந்த 10-ஆம் தேதி தூக்கிலிட சிறைத் துறை முடிவு செய்தது.

தா்மலிங்கம் அறிவுத் திறன் குறைபாடு கொண்டவா் என்றும் அவரது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் சா்வதேச மனித உரிமை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

எனினும், குற்றத்தின் தன்மையை நன்கு உணா்ந்தே அவா் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மனோதத்துவ நிபுணா்கள் சான்றிதழ் தந்துள்ளனா் எனக் கூறி, தா்மலிங்கத்தின் மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்க சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்தச் சூழலில், கரோனா தொற்று காரணமாக அவருக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT