தமிழ்நாடு

மழை, வெள்ள பாதிப்பு: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

27th Nov 2021 11:04 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆளுநருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேச சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக, ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் இழப்பீடு கோரியிருக்கும் நிலையில், ஆளுநருடனான முதல்வரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து, ஆளுநரை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT

Tags : stalin governor தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி ஆர்.என். ரவி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT